“இந்திய அணியை விட சென்னைக்காக தோனி அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார்” - சேவாக் காட்டம்

“இந்திய அணியை விட சென்னைக்காக தோனி அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார்” - சேவாக் காட்டம்

“இந்திய அணியை விட சென்னைக்காக தோனி அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார்” - சேவாக் காட்டம்
Published on

மைதானத்திற்குள் நுழைந்து நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட விவகாரத்தில் தோனிக்கு இரண்டு போட்டிகளில் தடை விதித்திருக்க வேண்டும் என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக கிரிக்பஸ்க்கு சேவாக் அளித்துள்ள பேட்டியில், “இந்திய அணிக்காக தோனி இதனை செய்திருந்தால் நான் மகிழ்ச்சி அடைந்திருப்பேன். அவரது கேப்டன்ஷிப்பில் நான் விளையாடும் போது இப்படி கோவப்பட்டு பார்த்ததில்லை. சென்னை அணிக்காக விளையாடும் போது கொஞ்சம் கூடுதலாகவே அவர் உணர்ச்சிவசப்படுகிறார் என்றே தோன்றுகிறது. 

ஏற்கனவே களத்தில் இரண்டு சிஎஸ்கே வீரர்கள் இருக்கையில், தோனி மைதானத்திற்குள் சென்றிருக்கக் கூடாது. நோ பால் விவகாரத்தில் அவர்களே பேசியிருப்பார்கள். தோனி இரண்டு போட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தால் அது உதாரணமாக அமைந்திருக்கும். அவர் மைதானத்திற்கு வெளியே இருந்திருக்க வேண்டும். வேண்டுமெனில் வாக்கி டாக்கியில் நான்காவது நடுவரிடம் பேசியிருக்க வேண்டும்.

இப்போது தடை விதிக்கவில்லை என்றால், நாளை வேறொரு கேப்டன் உள்ளே நுழைந்து நடுவரிடம் வாக்குவாதம் செய்ய நேரிடும். அப்படி நடந்தால் நடுவருக்கான முக்கியத்துவம் என்ன ஆகும்” என்று காட்டமாக பேசியுள்ளார். 

முன்னதாக, ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு இடையிலான போட்டி நேற்று முன் தினம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த  ராஜஸ்தான் அணி 151 ரன்கள் எடுத்தது. பின்னர் விளையாடிய சென்னை அணிக்கு கடைசி ஓவரில் 18 ரன்கள் தேவைப்பட்டது.

முதல் பந்தில் ஜடேஜா சிக்ஸர் அடிக்க, மூன்றாவது பந்தில் தோனி ஆட்டமிழக்க ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நேரத்தில்தான் ஸ்டோக்ஸ் வீசிய 4வது பந்து பேட்டிங் செய்த சண்டனரின் இடுப்புக்கு மேலே சென்றது. அப்போது, முதன்மை நடுவர் நோ பால் கொடுக்க, லெக் திசையில் நின்ற நடுவர் இல்லை என்றார். அதனால் சிறிய குழப்பம் ஏற்பட்டது. 

இதனை வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த தோனி, திடீரென மைதானத்திற்குள் சென்று நடுவர்களிடம் விளக்கம் கேட்டார். தோனி இப்படி நடந்து கொண்டது பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. கேப்டன் கூல் என்று அழைக்கப்பட்ட தோனியாக இப்படி நடந்து கொண்டார் என பலரும் வியந்தனர். இருப்பினும், அணியின் கேப்டன் என்ற முறையில் அவர் நடந்து கொண்ட விதத்தை ரசிகர்கள் கொண்டாடினர். இருப்பினும், விதிமுறைகளை மீறி நடந்து கொண்டதாக அவருக்கு ஊதியத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. தோனி நடந்து கொண்ட விதம் பெரிய விவாதமாகவே மாறியது. பலரும் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்தனர்

எல்லோரும் மனிதர்கள் தானே என்று தோனிக்கு ஆதரவாக முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவருக்கு இரண்டு போட்டிகளில் தடைவிதித்திருக்க வேண்டும் என்று சேவாக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com