ராஞ்சியில் பவுலிங் இயந்திரத்துடன் பயிற்சியை தொடங்கினார் தோனி !

ராஞ்சியில் பவுலிங் இயந்திரத்துடன் பயிற்சியை தொடங்கினார் தோனி !
ராஞ்சியில் பவுலிங் இயந்திரத்துடன் பயிற்சியை தொடங்கினார் தோனி !

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட இருப்பதால் ராஞ்சியில் பயிற்சியை தொடங்கியுள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி.

கொரோனாவால் தள்ளிப்போன ஐபிஎல் போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இந்த ஐபிஎல் தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்க மற்றொரு காரணம் தோனி. உலகக் கோப்பை அரையிறுதியில் ரன் அவுட் ஆகி வெளியேறிய தோனி இதுவரை களத்தில் இறங்கவே இல்லை. ஐபிஎல் போட்டியில் தோனி விளையாடுவார் என எதிர்பார்த்திருந்தபோது தான் கொரோனா குறுக்கே வந்தது. அதேவேளையில் இந்த ஐபிஎல் தோனிக்கும் முக்கியமானதாகவே உள்ளது. தோனியின் எதிர்கால கிரிக்கெட் வாழ்வை கணிக்க இந்த ஐபிஎல்லையே பலரும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகும் வகையில் ஜார்கண்ட் மாநிலத்தின் கிரிக்கெட் மைதானத்தின் உள் அரங்கில் கிரிக்கெட் பயிற்சியை தோனி மேற்கொண்டுள்ளார். இது குறித்து ஜார்கண்ட் விளையாட்டு அகாடெமி அதிகாரி ஒருவர் "டைம்ஸ் நவ்" இணையதளத்துக்கு பேட்டியளித்தார். அதில் "கடந்த வாரம் அகாடெமியில் பயிற்சியை மேற்கொள்ள தோனி வருகை தந்தார். இங்கிருக்கும் உள் அரங்கில் இருக்கும் பவுலிங் இயந்திரத்தின் உதவியுடன் பேட்டிங் பயிற்சி மேற்கொண்டார்" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர் " கடந்த வார இறுதி நாள்களில் தொடர்ச்சியாக பயிற்சியை மேற்கொண்டார் தோனி. பின்பு அவர் இங்கு வரவில்லை. எனக்கு உண்மையாகவே தோனியின் திட்டம் என்ன மீண்டும் பயிற்சி மேற்கொள்ள வருவாரா என தெரியவில்லை. அவர் இங்கு பயிற்சி மேற்கொள்ள வரும்போதுதான் எங்களுக்கே தெரியும்" என்றார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com