இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 4-வது கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நேற்று தோற்றது.
190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு களம் இறங்கிய இந்திய அணி 49. 4 ஓவர்களின் முடிவில் 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரஹானே 60 ரன்களும், தோனி 54 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இந்த 50 ரன்களை எடுக்க, தோனிக்கு 114 பந்துகள் தேவைப்பட்டது. இதில் 70 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. இந்த ஆமை வேக அரை சதத்தின் மூலம் கங்குலியின் சாதனையை முறியடித்துள்ளார் தோனி.
2005-ம் அண்டு நடந்த இலங்கைக்கு எதிரான போட்டியில் சவுரவ் கங்குலி 105 பந்துகளில் 50 ரன்களை எடுத்திருந்தார். இதுதான் அதிக பந்துகளை செலவழித்து எடுக்கப்பட்ட அரை செஞ்சுரி என கூறப்பட்டது. பல வருடங்களுக்குப் பிறகு இந்த சாதனையை தோனி முறியடித்துள்ளார்.