அட ! தோனி இதுல கூடவா நம்பர் ஒன் ?

அட ! தோனி இதுல கூடவா நம்பர் ஒன் ?

அட ! தோனி இதுல கூடவா நம்பர் ஒன் ?
Published on

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். உலகின் பல்வேறு நாடுகளில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்ரனர். இந்தியாவில் சச்சின் டெண்டுல்கருக்கு பின்பு அதிகமான அன்பு ஒரு வீரர் நீது வைத்திருக்கிறார்கள் என்றால் அது தோனி மட்டும்தான்.

இவர் கிரிக்கெட்டில் மட்டும் சாதனை படைப்பவர் அல்ல. இப்போது தோனி இன்னொரு விஷயத்திலும் சாதனைப்படைத்துள்ளார். அது பீகார், ஜார்கண்ட் மாநிலத்தவர்களில் அதிகமான வருமான வரி கட்டியவர்களில் தோனிதான் முதலிடத்தில் உள்ளார்.

பீகார், ஜார்கண்ட் மாநிலத்தில் 2017 - 2018 ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்தவர்கள் விவரத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று வெளியிட்டனர். அதில் 2017 - 2018 ஆம் நிதியாண்டுக்கு தோனி மொத்தம் ரூபாய் 12 கோடி 17 லட்சம் ரூபாய் வருமான வரி கட்டியுள்ளதாக கூறியுள்ளனர். இதன் மூலம் பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் அதிகளவிலான வருமான வரி கட்டியவர்களில் தோனிதான் முதலிடத்தில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

37 வயதான 2016 - 2017 ஆம் ஆண்டுக்கான நிதியாண்டில் ரூபாய் 10 கோடியே 93 லட்சம் வருமான வரி கட்டியுள்ளார். 2005 ஆம் ஆண்டு முதல் இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடி வரும் தோனி பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர். தோனி தலைமையிலான இந்திய அணி டி20 உலகக் கோப்பை, 50 ஓவ் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் கோப்பை, ஆசியக் கோப்பைகள் கைப்பற்றி சாதனைப்படைத்துள்ளது. மேலும், தோனி தலைமையிலான இந்திய அணிதான் முதல்முதலில் டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தை பிடித்தது.

ஜார்கண்ட் போன்ற மிகவும் பின் தங்கிய மாநிலத்தில் இருந்து வந்த தோனி 2013 - 2014 ஆம் ஆண்டில் இருந்து பீகார், ஜார்கண்ட் மாநிலங்களில் இருந்து அதிகமான வருமான வரி கட்டும் நபராக உருவெடுத்து வந்துள்ளார். போர்ஃப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகில் அதிகப்படியான வருமானத்தை ஈட்டும் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலில் தோனியும் இடம்பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com