மொட்டை தலை; துறவி ஆடை - வைரலான தோனியின் புதிய அவதாரம்
முன்னாள் இந்திய கேப்டன் தோனியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, ஸ்டைலுக்கு பேர் போனவர். அவரின் உடல்பாவனைகளும், ஹெர்ஸ்டைலும் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி அதகளப்படுத்தும். அந்த வகையில் தற்போதும் தோனியின் புகைப்படம் ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்தப் புகைப்படத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் தோனி துறவி போல ஆடை அணிந்து, மொட்டை அடித்து பவ்யம்மாக அமர்ந்திருக்கிறார். மேலும் அந்தப் பதிவில், “ தோனியின் இந்தப் புதிய அவதாரம் இணையத்தை அதகளப்படுத்தி வருகிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கீறீர்கள்” என்று கேள்வி எழுப்பியது.
இந்தக் கேள்விக்கு நெட்டிசன்கள் கூறிய கமெண்டுகள் பின்வருமாறு;-
தற்போது தோனி 2021 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் பங்கேற்க, சென்னை சேப்பாக்காத்தில் வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அது தொடர்பான புகைப்படங்களும் அண்மையில் சமூக வலைதளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.