தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்? - ஷேன் வாட்சன் சுவாரஸ்ய பதில்!

தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்? - ஷேன் வாட்சன் சுவாரஸ்ய பதில்!
தோனி இன்னும் எத்தனை ஆண்டுகள் விளையாடுவார்? - ஷேன் வாட்சன் சுவாரஸ்ய பதில்!

''சிறந்த கேப்டன்களில் ஒருவராக எப்போதும் இருப்பவர் எம்.எஸ்.தோனி'' எனப் புகழ்ந்துள்ளார் ஷேன் வாட்சன்.


ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா மார்ச் 31ஆம் தேதி தொடங்கி மே 28ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்த முறை முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு சாம்பியன் ஆன குஜராத் டைட்டன்ஸ் அணியை அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் எதிர்கொள்கிறது.

தோனியின் கடைசி ஐபிஎல் சீசன் இதுவாக இருக்கலாம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் ஐபிஎல் தொடருக்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. முதல் சீசனிலிருந்து சென்னையை மிகச் சிறப்பாக வழிநடத்தி வரும் தோனி, இதுவரை 4 முறை ஐபிஎல் சாம்பியன், 11 ஐபிஎல் சீசனில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற்றம் என வெற்றிகரமான அணியாக திகழ்வதற்கு முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறார்.

இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடி உள்ள ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷேன் வாட்சன் தோனி குறித்தும், சிஎஸ்கே அணி குறித்தும் தற்போது தெரிவித்துள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று வருகிறது. ''தோனியின் கடைசி ஐபிஎல் போட்டி இது என்று கேள்விப்பட்டேன்.  தோனியின் விளையாட்டைப் போலவே அவரும் சிறந்த மனிதர். அவரது ஃபிட்னெஸ் அவரை ஒரு நல்ல தலைவராக உருவாக்கியிருக்கிறது. மைதானத்தில் அவரது திறமைகள் அபாரமானவை. சிஎஸ்கே வெற்றிபெற முக்கிய காரணங்களில் அவரும் ஒருவர். சிறந்த கேப்டன்களில் ஒருவராக எப்போதும் இருப்பவர் எம்.எஸ்.தோனி. இப்போதும் சூப்பர் ஃபிட்டுடன் இருக்கிறார். அவர் விரும்பினால் இன்னும் ஓரிரு ஆண்டுகள் விளையாடலாம்.

இங்கே களத்தில் இருப்பது மற்றும் ஜாக் காலிஸ், ஆரோன் ஃபிஞ்ச் உள்ளிட்டோருடன் டிரஸ்ஸிங் ரூம்பை பகிர்ந்துகொள்வது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இது எங்களுக்கு அடுத்த கட்டத்தை அளிக்கும் ஒரு வித்தியாசமான லீக். இதில் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்'' என்று ஷேன் வாட்சன் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com