தோனி சூப்பர்தான், ஆனால் இப்போது... ஆஸி. கேப்டன் புது கணிப்பு!

தோனி சூப்பர்தான், ஆனால் இப்போது... ஆஸி. கேப்டன் புது கணிப்பு!
தோனி சூப்பர்தான், ஆனால் இப்போது... ஆஸி. கேப்டன் புது கணிப்பு!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றது. இதில் நான்கு போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, கடைசி ஒரு நாள் போட்டியில் நேற்று விளையாடியது. மான்செஸ்டரில் நடந்த இந்தப் போட் டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய வீரர்கள் அதிரடி காட்டினர். ஆனால் அவசரமாக ஆடி விக்கெட்டுகளை மளமளவென இழந்தனர். அந்த அணி, 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 205 ரன்களை மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 56 ரன்கள் சேர்த்தார். இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி 4 விக்கெட்டுகளையும் சாம் குரன் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணியும் தொடர்ந்து 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது களமிறங்கிய விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர், சிறப்பாக ஆடி, அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அவர் 110 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். இதன் மூலம் இந்த தொடரை ஐந்துக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வென்று ஆஸ்திரேயை வொயிட்வாஷ் செய்தது இங்கிலாந்து அணி.

(டிம் பெய்ன்)

பின்னர் பேசிய ஆஸ்திரேலிய அணியின் விக்கெட் கீப்பரும் கேப்டனுமான டிம் பெயின், இங்கிலாந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்ற விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரை புகழ்ந்து தள்ளினார். 

அவர் கூறும்போது, ‘ ஜோஸ் பட்லர் சிறப்பான விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். இப்போது, இந்த நிமிடத்தில் உலகின் சிறந்த விக்கெட் கீப்பர் பேட் ஸ்மேன் அவர்தான். அவருக்கு சவால் விடுவதற்கு பலர் இருப்பதாக நினைக்கவில்லை. இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ் மேன் மகேந்திர சிங் தோனி, சிறப்பான வீரர்தான். ஆனால், இந்த நேரத்தில் ஜோஸ் பட்லர், முன்னணியில் இருக்கிறார். அவர், ஒரு நாள் போட் டிக்கான தனது ஆட்டத்தை நன்றாக புரிந்து வைத்திருக்கிறார். அவர் பலம் என்ன என்பதையும் தெரிந்து வைத்திருக்கிறார். எங்கள் அணியின் டிராவிஸ் ஹெட், டியார்ஸி ஷார்ட் ஆகியோரும் சிறப்பாக விளையாடினார்கள். இங்கிலாந்து அணியின் பேர்ஸ்டோவ், ஜேசன் ராய் ஆகியோரி ன் ஆட்டமும் நன்றாக இருந்தது’ என்றார்.

ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது பெற்ற ஜோஸ் பட்லர் கூறும்போது, ‘உறுதியோடு விளையாடி ஆஸ்திரேலிய அணியை வொ யிட்வாஷ் செய்திருக்கிறோம். நாங்கள் சிறப்பாக பந்துவீசினோம். ஆனால் பேட்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம். எங்களுக்கு பார்ட்னர்ஷிப் தேவையாக இருந்தது. இறுதியில் வெற்றி பெற்றுவிட்டோம். இந்தப் போட்டியில் ரசித்து விளையாடினேன்’ என்றார். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com