லடாக்கில், சுதந்திர தினத்தை இன்று கொண்டாடிய தோனி, அடுத்து சியாச்சின் செல்ல இருப்பதாக தகவல்கள் தெரிவிக் கின்றன.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மகேந்திர சிங் தோனி. முன்னாள் கேப்டனான தோனி, ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். காஷ்மீரில், இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. ராணுவப் பயிற்சி பெற இருப்பதால், வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான அணியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி, கேட்டுக்கொண்டிருந்தார்.
இதையடுத்து அவர், ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சிப் பெற்றார். பின்னர் ‘விக்டர் படை’யுடன் இணைந்து காஷ்மீரில் ரோந்து பணியில் ஈடுபட்டார்.
இந்நிலையில், 73 வது சுதந்திர தினம், நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை லடாக்கில் உள்ள ராணுவ வீரர்களுடன் தோனி கொண்டாடினார். அங்குள்ள சத்பவனா ராணுவப் பள்ளிக்குச் சென்ற அவர், மாணவர்களுடன் உரையாற்றினார்.
முன்னதாக நேற்று ராணுவ ஜெனரல் மருத்துவ மனைக்கு அவர் சென்றார். அங்கு சிகிச்சை பெற்று வரும் ராணுவ வீரர்களிடம் நலம் விசாரித்து, பேசிக்கொண்டிருந்தார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையதளத்தில் வெளியாகியுள்ளன.
இங்கிருந்து சியாச்சின் மலைப்பகுதிக்கு செல்வார் என்று கூறப்படுகிறது. உலகில் மிக உயர்ந்த பனி மலைப்பகுதியான இங்குள்ள போர் பள்ளியை அவர் பார்க்கிறார். ராணுவ வீரர்கள் அங்கு என்ன நிலையில் இருக்கிறார்கள், எப்படி செயல்படு கிறார்கள், அவர்களின் பயிற்சி உள்ளிட்டவற்றை தோனி தெரிந்துகொள்கிறார்.
ரோந்து பணியின் போது, அவருக்கு ஆயுத பயிற்சிகள் வழங்கப்பட்டதாகவும் எதிரிகளை எப்படி டார்கெட் செய்வது என்று விளக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
LT COLONEL Dhoni at Military Hospital Today.