பிட்சில் ரோலரை இயக்கும் தோனி - வைரலான வீடியோ..!

பிட்சில் ரோலரை இயக்கும் தோனி - வைரலான வீடியோ..!

பிட்சில் ரோலரை இயக்கும் தோனி - வைரலான வீடியோ..!
Published on

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனி எது செய்தாலும் அது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவிடும். அதுபோலவே இப்போது அவரின் மற்றொரு செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசப்பட்டு வருகிறது.

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இருக்கும் பிட்சை சமன்படுத்த பயன்படுத்தப்படும் ரோலர் வாகனத்தை இயக்கி சரி செய்யும் பணியில் ஈடுபட்டார் தோனி. ஐபிஎல் போட்டிகளுக்கு தயாராகும் விதமாக ராஞ்சியில் உள்ள மைதானத்தில் தினமும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார் தோனி.

அப்போது மைதானத்தின் ஆடுகள பொறுப்பாளர் பாசுதாவுடன் பிட்சை பார்வையிட்டார் தோனி. அவருக்கும் பாசுதாவுக்கும் பல ஆண்டுகளாக நல்ல நட்பு உண்டு. இதன் காரணமாக, ரோலர் வாகனத்தை தானே இயக்கி பிட்சை சரி செய்யும் பணியில் இறங்கினார் தோனி. தோனியின் இந்த புதிய வேலையை ரசிகர்கள் ட்விட்டரில் பதிவிட்டு வைராலாக்கி வருகின்றனர்.

13 ஆவது ஐபிஎல் டி20 தொடர் போட்டிகள் மார்ச் 29 ஆம் தேதி தொடங்குகிறது. இதில் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் - மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்தப் போட்டி மும்பை வாங்கடே மைதானத்தில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி எப்போது பயிற்சிக்காக சென்னை வருவார் என்று ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருந்தனர். இப்போது அவர் எப்போது சென்னை வருகிறார் என்ற செய்தி அண்மையில் வெளியானது. மார்ச் 1 ஆம் தேதி சென்னை வரும் தோனி, 2ஆம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியை மேற்கொள்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com