தோனி ஹாட்ரிக் சிக்ஸ்: ரசிகர்கள் உற்சாகம்

தோனி ஹாட்ரிக் சிக்ஸ்: ரசிகர்கள் உற்சாகம்
தோனி ஹாட்ரிக் சிக்ஸ்: ரசிகர்கள் உற்சாகம்

டிஎன்பிஎல் துவக்க நாளை முன்னிட்டு நடைபெற்ற சிக்சர் அடிக்கும் போட்டியில் தோனியின் ஹாட்ரிக் சிக்ஸர்களால் அரங்கமே அதிர்ந்தது.

தமிழ்நாடு பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி சென்னையில் தொடங்கியது. முதல் நாளான இன்று நடப்புச் சாம்பியனான தூத்துக்குடி அணியும், திண்டுக்கல் அணியும் மோதின. தொடக்க விழாவை முன்னிட்டு தோனி, மேத்திவ் ஹெய்டன், மோஹித் சர்மா, பத்ரிநாத், பவன் நேகி உள்ளிட்டோர் சென்னை சூப்பர் கிங்ஸ் சீருடையுடன் கலந்துகொண்டனர். இந்நிலையில் போட்டி துவங்கும் முன் சிக்ஸர் அடிக்கும் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், ரசிகர்களின் கரகோஷங்களுக்கு மத்தியில் களமிறங்கிய தோனி அடுத்தடுத்து 3 சிக்சர்களை விளாசி ரசிகர்களை மகிழ்வித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com