"தோனி இப்போது அதனை விளையாடுவதில்லை" தீபக் சாஹர் !

"தோனி இப்போது அதனை விளையாடுவதில்லை" தீபக் சாஹர் !

"தோனி இப்போது அதனை விளையாடுவதில்லை" தீபக் சாஹர் !
Published on

இப்போதெல்லாம் தோனி பப்ஜி விளையாடுவதில்லை அவர் இப்போது வேறு ஆட்டத்துக்கு மாறிவிட்டார் என்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் தீபக் சாஹர் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 29 ஆம் தேதி தொடங்கவிருந்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி தொடர் ஏப்ரல் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இந்த உத்தரவு ஏப்ரல் 14 ஆம் தேதி வரை அமலில் இருக்கும். ஊரடங்கு நாள்கள் இன்னும் அதிகரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்போதைக்கு ஐபிஎல் போட்டிகள் தொடங்குவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றே தெரிகிறது.

இந்த ஊரடங்கு நாள்களில் கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் சமூக வலைத்தளம் மூலம் ரசிகர்களிடையே நேரடியாக உரையாற்றி வருகின்றனர். மேலும் தாங்கள் வீட்டில் இருக்கும்போது நிகழும் சுவாரஸ்ய நிகழ்வுகளையும் வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர். அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகமும் தீபக் சாஹரை ரசிகர்களிடம் நேரடியாக உரையாட வைத்தனர். அப்போது சிஎஸ்கே கேப்டன் தோனி குறித்து பல்வேறு சுவார்ஸ்யமான தகவல்களை பகிர்ந்துக் கொண்டார் தீபக் சாஹர்.

அப்போது, தோனி உங்களுடன் பப்ஜி விளையாடுகிறாரா என்ற கேள்வியை எழுப்பியிருந்தார். அதற்குப் பதிலளித்த தீபக் சாஹர் "மஹி அண்ணன் இப்போது பப்ஜியை அவ்வளவாக விளையாடுவதில்லை, ஆனால் நான் இன்னும் விளையாடிக்கொண்டுதான் இருக்கிறேன். மஹி அண்ணன் இப்போது வேறு விளையாட்டை விளையாடுகிறார்" என்றார் அவர்.

மேலும் தொடர்ந்த தீபக் சாஹர் "திடீரென ஒருநாள் மீண்டும் பப்ஜி விளையாட வந்தார். ஆனால் அவரால் முன்புபோல விளையாட முடியவில்லை. பப்ஜி பழக்கம் விட்டுப்போயிருந்தது. மஹி அண்ணனால் யார் எங்கிருந்து சுடுகிறார்கள் என்பதை அவரால் கண்டுபிடிக்கவும் யூகிக்கவும் முடியவில்லை" எனத் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com