\
தோனிக்கு மாற்றாக யாருமில்லை: தேர்வுக்குழு தலைவர்

தோனிக்கு மாற்றாக யாருமில்லை: தேர்வுக்குழு தலைவர்

தோனிக்கு மாற்றாக யாருமில்லை: தேர்வுக்குழு தலைவர்
Published on

உலகக் கோப்பை போட்டி வரை தோனியே விக்கெட் கீப்பராக செயல்படுவார் என்று இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறும்போது, ’இந்திய அணிக்கு தேர்வு செய்வதற்காக, சில விக்கெட் கீப்பர்களை ’ஏ’ அணியில் பயன்படுத்திப் பார்த்தோம். யாரும் சிறப்பாக செயல்படவில்லை. தோனியின் ஃபார்ம் அருமையாக இருக்கிறது. சமீபத்திய டி20 போட்டிகளில் அவரது வேகத்தைக் கண்டிருப்பீர்கள். அதனால் உலகக் கோப்பை வரை அவரை விக்கெட் கீப்பராக தொடர முடிவு செய்துள்ளோம். உலகின் நம்பர் ஒன் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தோனிதான். அதில் மாற்றுக்கருத்தில்லை. அவருக்கு ஈடாக, வேறு விக்கெட் கீப்பர் யாருமில்லை. ரிஷாப் பண்ட், சஞ்சு சாம்சன் ஆகியோர் பற்றி சொல்கிறார்கள். சர்வதேச கிரிக்கெட் போட்டிக்கு நாங்கள் எதிர்பார்க்கும் அளவுக்கு அவர்கள் வளரவில்லை. அதனால் அவர்கள் தங்கள் தகுதியை வளர்த்துக்கொள்ள இந்திய ஏ அணியில் வாய்ப்பளித்துக் கொண்டிருக்கிறோம்’ என்றார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com