“தோனியை நாங்கள் பாதுகாக்க தேவையில்லை” - ராணுவ தளபதி
தோனியை தாங்கள் யாரும் பாதுகாக்க தேவையில்லை என்றும் அவர்தான் மக்களைப் பாதுகாப்பார் என ராணுவ தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். காஷ்மீரில், இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, நேற்று பணியில் இணைந்தார்.
தோனி ராணுவத்தில் இணைந்துள்ளது குறித்து பேசிய பிபின் ராவத், “தோனியை நாங்கள் பாதுகாக்க வேண்டிய தேவையில்லை. அவர் தன்னுடைய பணியில் குடிமக்களையும், பாதுகாப்பு படை வீரர்களையும் பாதுகாப்பார். ஒரு இந்திய குடிமகன் ராணுவ சீருடை அணியை விரும்பினால், அவரும் அதற்கான பணிகளை மேற்கொள்வது பயிற்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், தோனி தன்னுடைய அடிப்படை பயிற்சிகளை செய்திருக்கிறார். தன்னுடைய பணிகளை அவரால் செய்ய முடியும் என நம்புகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.