“சென்னை அணியின் கேப்டனாக தோனி தொடருவது சந்தேகம்தான்” - சஞ்சய் பங்கர்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி தொடருவது சந்தேகம்தான் என தெரிவித்துள்ளார். சென்னை அணி நிர்வாகம், தோனி தான் 2021 சீசனில் சென்னையின் கேப்டன் என தெரிவித்துள்ளது. தோனியும் 2021 சீசனில் நான் விளையாடுவேன் என சொல்லியுள்ள நிலையில் சஞ்சய் பங்கர் இதை தெரிவித்துள்ளார்.
“தோனியை அருகில் இருந்து பார்த்து புரிந்து கொண்டவன் நான். 2011 உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன்சி பொறுப்பை அடுத்தவர்களிடம் ஒப்படைக்கவே தோனி விரும்பினார். இருப்பினும் அந்த சமயத்தில் தலைமை பண்பு மிக்க சரியான வீரரை தெரிவு செய்ய வேண்டி இருந்ததால் அதை செய்யாமல் காத்திருந்தார். நேரம் வந்ததும் கோலியிடம் பொறுப்பை கொடுத்துவிட்டு இந்திய அணியில் வீரராக தொடர்ந்தார்.
அதேபோல தோனி இந்த முறை சென்னை அணியை வழிநடத்தி செல்லும் வாய்ப்பை டூப்ளஸியிடம் வழங்குவார் என நான் நினைக்கிறேன். எனக்கு தெரிந்து தோனிக்கு அடுத்தபடியாக அணியை வழிநடத்தும் திறன் டூப்ளஸியிடம் உள்ளது” என தெரிவித்துள்ளார்.
எது எப்படி இருந்தாலும் 2021 சீசனில் ‘தல’ தோனி விளையாடுவது மட்டும் உறுதியாகி உள்ளதால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.