விளையாட்டு
கால்பந்து போட்டியில் பாலிவுட்டை வென்ற கிரிக்கெட் நட்சத்திரங்கள்
கால்பந்து போட்டியில் பாலிவுட்டை வென்ற கிரிக்கெட் நட்சத்திரங்கள்
சினிமா நட்சத்திரங்களுக்கு எதிரான கால்பந்து போட்டியில் கிரிக்கெட் நட்சத்திரங்கள் அணி வெற்றி பெற்றது.
மும்பையில் நடந்த போட்டியில் கோலி தலைமையிலான ஆல் ஹார்ட் அணி, ரன்பிர் கபூர் தலைமையிலான ஆல் ஸ்டார்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. தோனி, ஷிகர் தவான் உள்ளிட்டோரை உள்ளடக்கிய ஆல் ஹார்ட் அணி தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தியது. தோனி தொடர்ச்சியாக இரண்டு கோல்கள் அடித்து தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். ஆட்ட நேர முடிவில் ஏழுக்கு - மூன்று என்ற கோல் கணக்கில் விராட் கோலியின் கிரிக்கெட் நட்சத்திரங்கள் அணி வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக தோனி தேர்வு செய்யப்பட்டார்.