ராணுவப் பயிற்சியை தொடங்கினார் தோனி

ராணுவப் பயிற்சியை தொடங்கினார் தோனி

ராணுவப் பயிற்சியை தொடங்கினார் தோனி
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் தோனி, பாராசூட் ரெஜிமெண்டில் தனது பயிற்சியை நேற்று முதல் தொடங்கியுள் ளார். 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்திய ராணுவத்தில் கவுரவ லெப்டினன்ட் கர்னலாக இருக்கிறார். அவ்வப்போது ராணுவ வீரர்களுடன் உரையாடும் தோனி, ராணுவ குழுவுடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்டிருந்ததார். 

இதனால் இந்திய கிரிக்கெட் அணியின், வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்துக்கு தன்னை தேர்வு செய்ய வேண்டாம் என்று கூறியிருந்தார். இதையடுத்து இந்திய ராணுவத்தில் இணைந்து பயிற்சிப் பெற ராணுவ தளபதி பிபின் ராவத், தோனிக்கு அனு மதி வழங்கினார்.

காஷ்மீரில், இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் வீரர்களுடன் இணைந்து பயிற்சி பெற அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் ராணுவ நடவடிக்கையில் பங்குபெற அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாராசூட் ரெஜிமெண்டுடன் தோனி நேற்று இணைந்தார். பின் அங்கு ராணுவப் பயிற்சியை மேற்கொண்டார். இந்தப் பயிற்சியை அவர் 2 மாத காலம் மேற்கொள்வார் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com