டி20 போட்டியில் புதிய சாதனை செய்த தோனி - இரண்டாமிடத்தில் தமிழக வீரர்

டி20 போட்டியில் புதிய சாதனை செய்த தோனி - இரண்டாமிடத்தில் தமிழக வீரர்
டி20 போட்டியில் புதிய சாதனை செய்த தோனி - இரண்டாமிடத்தில் தமிழக வீரர்

உலக அளவில் டி20 போட்டியில் விக்கெட் கீப்பராக அதிக விக்கெட்டுகளை (catches) கைப்பற்றிய வீரர்களில் முதலிடத்தில் தோனியும், இரண்டாம் இடத்தில் தினேஷ் கார்த்திக்கும் இடம் பிடித்துள்ளனர்.

15-வது சீசன் ஐபிஎல் போட்டி தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெற இன்னும் ஒரு சில போட்டிகளே உள்ள நிலையில், ஒவ்வொரு அணியும் வெற்றிபெறும் முனைப்பில் ஈடுபட்டுள்ளன. இதில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்டநிலையில், மீதமுள்ள போட்டிகளில் ஆறுதல் வெற்றிபெறும் முனைப்பில் உள்ளது.

இந்நிலையில், நேற்று நடைபெற்ற 55-வது லீக் போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி அணியை, சிறப்பான பந்துவீச்சு மற்றும் பீல்டிங்கால் சென்னை அணி 117 ரன்களுக்குள் சுருட்டியது. இதையடுத்து 91 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில், ரோவ்மன் பவல் விக்கெட்டுக்குப் பிறகு, ஷர்துல் தாக்கூர் விக்கெட்டை கைப்பற்றியநிலையில், தோனி புதிய சாதனை படைத்துள்ளார்.

அதன்படி, உலக அளவில் டி20 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை கைப்பற்றி தோனி புதிய சாதனைப் படைத்து முதலிடத்தில் உள்ளார். கடந்த 2006-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக டி20 போட்டியில் விக்கெட் கீப்பராக களமிறங்கிய முன்னாள் இந்திய வீரரரும், கேப்டனுமான தோனி, இதுவரை 347 டி20 போட்டிகளில் விளையாடி 200 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இதேபோல், இந்திய அணி வீரரும், விக்கெட் கீப்பரும், தற்போதைய ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரருமான தினேஷ் கார்த்திக் 299 டி20 போட்டிகளில் விளையாடி 182 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார்.

3-வது இடத்தில் பாகிஸ்தானைச் சேர்ந்த கம்ரான் அக்மல், 282 டி20 போட்டிகளில் விளையாடி 172 விக்கெட்டுகளும் கைப்பற்றியுள்ளார். மேலும், ஐபிஎல் போட்டியில் மட்டும் 168 போட்டிகளில், 129 விக்கெட்டுகளை கைப்பற்றி தோனி சாதனை படைத்துள்ளார். இதில் 39 ஸ்டெம்பிங்குகளும் அடங்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com