வீரர்களுக்கு தோனி வாய்ப்புகளை வழங்கினார் - ஷேவாக்
வீரர்களுக்கு வாய்ப்பு வழங்குவதை கேப்டனாக இருந்தபோது தோனி மிகச்சரியாக கையாண்டார் என கிரிக்கெட் வீரர் ஷேவாக் தெரிவித்துள்ளார்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை 2-1க்கு என்ற கணக்கில் இந்திய அணி வென்றது. தோனிக்கு பிறகு இந்திய அணியில் நிலையான கீப்பர் இல்லாத நிலை உள்ளது. பண்ட்டிற்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டபோதும் அவர் கீப்பராக பல தவறுகளை செய்தார். பின்னர் பண்ட்க்கு ஓய்வு கொடுக்கப்பட்டது. ராகுல் கீப்பராக களம் இறங்கினார். கீப்பராக இருக்கும் பட்சத்தில் ராகுல் 5-வது வீரராக களம் இறக்கப்படுவாரா அல்லது தொடக்க ஆட்டக்காரராக களம் இறக்கப்படுவாரா என்ற சந்தேகம் கிரிக்கெட் ரசிகர்களிடையே உள்ளது.
இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள வீரேந்திர ஷேவாக், 5-வது வீரராக களம் இறக்கப்பட்டு சரியாக ஜொலிக்காததால் ராகுலின் இடத்தை மாற்ற தற்போதைய இந்திய அணி யோசிக்கும். ஆனால் தோனி கேப்டனாக இருந்தபோது இந்த மாதிரி பிரச்னை எழவில்லை. வீரர்களின் பேட்டிங் வரிசையில் அவர் தெளிவாக இருந்தார். வீரர்கள் தங்களது திறமைகளை நிரூபிக்க தோனி வாய்ப்புகளை வழங்கினார்.
வீரர்கள் சில போட்டிகளில் சரியாக சோபிக்கவில்லை என்றால், அவர்களை ஓரமாக அமர வைப்பதன்மூலம் அவர்கள் சிறந்த வீரராக வர முடியாது. அவர்களுக்கு போதுமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் கீப்பராக தொடர அதிக வாய்ப்புகள் வழங்க வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.