மைதானத்தில் களமிறங்கிய 'தல' தோனி! உற்சாகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்

மைதானத்தில் களமிறங்கிய 'தல' தோனி! உற்சாகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்

மைதானத்தில் களமிறங்கிய 'தல' தோனி! உற்சாகத்தில் சிஎஸ்கே ரசிகர்கள்
Published on

ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பதற்கான பயிற்சிக்காக சென்னை வந்த சிஎஸ்கே கேப்டன் தோனி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் களமிறங்கினார்.

இந்தாண்டு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. இந்நிலையில் இப்போட்டித் தொடரில் பயிற்சி செய்வதற்காக தோனி நேற்று சென்னை வந்தடைந்தார். சென்னை விமான நிலையத்தில் வந்த அவருக்கு ரசிகர்கள் மற்றும் சிஎஸ்கே அணி நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதனையடுத்து தோனியின் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டாகியது.

கடந்தாண்டு ஐக்கிய அரபு நாடுகளில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றது. கடந்தாண்டும் பயிற்சிக்காக சென்னை வந்த தோனி தன்னுடைய ஓய்வை சென்னையில் இருந்துதான் அறிவித்தார். அப்போது சுரேஷ் ரெய்னாவும் தன் ஓய்வை அறிவித்தார். ஆனால் சென்னை அணி கடந்தாண்டு ஐபிஎல் தொடரில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

இப்போது பயிற்சிக்காக சென்னை வந்துள்ள தோனியுடன் அம்பத்தி ராயுடு, ருதுராஜ் கெய்க்வாட், ஜெகதீசன், சாய் கிஷோர் மற்றும் சில உள்ளூர் வீரர்கள் நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டனர். அந்தப் புகைப்படங்களை சிஎஸ்கே நிர்வாகம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com