செல்லப் பிராணிக்குப் பந்து விளையாட கற்றுக் கொடுக்கும் தோனி மகள் - வைரல் வீடியோ 

செல்லப் பிராணிக்குப் பந்து விளையாட கற்றுக் கொடுக்கும் தோனி மகள் - வைரல் வீடியோ 
செல்லப் பிராணிக்குப் பந்து விளையாட கற்றுக் கொடுக்கும் தோனி மகள் - வைரல் வீடியோ 
அழகான ஆகாயத்தின் கீழ் ஒரு புல்வெளி தரையில் அமர்ந்தபடி  தல தோனி மற்றும் அவரது  மகள் ஷிவா ஆகிய இருவரும் தங்களது செல்லப்பிராணியுடன் பந்து விளையாடும் வீடியோ வைரலாக மாறியுள்ளது.  
 
ஊரடங்கு காலத்தில் கிரிக்கெட் நட்சத்திரங்கள் பலர் இன்ஸ்டா பக்கத்தில் தங்களுக்கு விருப்பமானவர்களுடன் நேரலையில் அரட்டை அடித்து வருகின்றனர். இது ஒரு புதிய ட்ரெண்ட் ஆக மாறியுள்ளது. தனிமனித இடைவெளியை அதிகம் அறிவுறுத்தப்படுவதால் பலரும் இந்தப் பக்கத்தை விரும்பி ஏற்றுள்ளனர். 
 
 
ஆனால், இந்த சமூக ஊடக உலகத்திலிருந்து தல தோனி பல ஆயிரம் மையில்களுக்கு அப்பால் உள்ளார். அவரைப் பற்றி பலரும் பேசுகிறார்கள். அவர் சர்வதேச போட்டிகளில் இருப்பாரா? இல்லை ஓய்வு எடுத்துக் கொண்டு விட்டாரா? எனப் பல ஊகங்கள் வந்த வண்ணம் உள்ளன. ஆனால் அவர் இதற்கெல்லாம் அசைவதாக இல்லை. 
 
இந்நிலையில், சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில் தல தோனி குறித்த ஒரு காணொளியைப் பகிர்ந்து கொண்டுள்ளது. அந்த வீடியாவில் தோனி தனது பண்ணை வீட்டிலுள்ள ஒரு அழகான புல் தரையில் உட்கார்ந்திருக்கிறார். அருகில் அவரது மகள் ஜிவா நின்று கொண்டு இருக்கிறார். அவர்களது செல்லப் பிராணிக்கு இவர்கள் இணைந்து பந்தை கேட்ச் பிடிப்பது எப்படி எனக் கற்றுத் தருகின்றனர். அவர்களது நாய் சரியாக கேட்ச் பிடிக்கவில்லை என்றால் உடனே தோனி மகள் நாயை அதட்டுகிறார். அதை ஒன்று அறியாதவர் போல் தோனி வேடிக்கை மட்டுமே பார்க்கிறார். தோனியும் ஜிவாவும் டென்னிஸ் பந்துகளைப் பயன்படுத்தி தங்கள் செல்ல நாய்க்குப் பிடிக்கும் பயிற்சியைக் கொடுக்கின்றனர்.
 
 
"உன்னால் முடிந்ததை விட என்னால் அதை நன்றாக வீச முடியும்" என்று ஜிவா தனது செல்ல நாயிடம் சொல்கிறார். மேலும் நாயை நோக்கி ஒரு பந்தை எறிந்தார். செல்ல நாய் சில பந்துகளை வாயால் எகிறிப் பிடித்தது. மேலும் சிலவற்றைத் தவறவிட்டது.
 
முன்னதாக, எம்.எஸ்.தோனி மற்றும் அவர்களது மகள் ராஞ்சியில் உள்ள தங்கள் பண்ணை வீட்டில் பைக் சவாரிக்குச் செல்லும் வீடியோவை சாக்‌ஷி சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டிருந்தார். மேலும் தோனி தங்கள் பண்ணை வீட்டில் புல்வெளியை வெட்டுவது பற்றிய ஒரு காட்சியை சாக்‌ஷி பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com