‘இதை மட்டும் செய்யாதே’ - ஸ்ரேயாஸ்சுக்கு தோனி கொடுத்த டிப்ஸ்

‘இதை மட்டும் செய்யாதே’ - ஸ்ரேயாஸ்சுக்கு தோனி கொடுத்த டிப்ஸ்
‘இதை மட்டும் செய்யாதே’ - ஸ்ரேயாஸ்சுக்கு தோனி கொடுத்த டிப்ஸ்

ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் மிகவும் அற்புதமாக தன்னுடைய பேட்டிங் திறனை வெளிப்படுத்தி இருந்தார். டெல்லி அணி நாக்-அவுட் சுற்றுவரை கூட விளையாடாத நிலையில், லீக் சுற்றுப் போட்டிகளில் மட்டும் விளையாடி 411 ரன்கள் அவர் குவித்தார்.

இந்திய அணிக்காக 6 ஒருநாள் மற்றும் 6 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஒருநாள் போட்டியில் 2 அரைசதங்கள் அடித்துள்ளார்.  இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான தோனி தமக்கு முக்கியமான ஆலோசனை வழங்கியதாக ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், “இந்திய கிரிக்கெட் அணியில் நான் சேர்ந்த பிறகு முடிந்த வரை சமூக வலைதளங்களில் இருந்தும், செய்திகள் படிப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று தோனி எனக்கு ஆலோசனை கூறினார். சமூக வலைதளங்கள் நம்முடைய வாழ்வில் மிகப்பெரிய பங்களிப்பு செலுத்துகிறது. இருப்பினும் அவர் சொன்னபடி நான் ஓரளவுக்கு அதனை தவிர்த்து இருந்தேன். இருப்பினும், விமர்சனங்கள் என்னை ஊக்குவிப்பதோடு, தொடர்ந்து பயணிக்க உதவும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com