கோலி, தோனி ஆட்டத்தை காண ஏங்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்

கோலி, தோனி ஆட்டத்தை காண ஏங்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்

கோலி, தோனி ஆட்டத்தை காண ஏங்கும் பாகிஸ்தான் ரசிகர்கள்
Published on

கேப்டன் விராட் கோலி, மகேந்திர சிங் தோனியின் ஆட்டத்தை தங்களது சொந்த மண்ணில் காண பாகிஸ்தான் ரசிகர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

பாகிஸ்தான் - ஐ.சி.சி. உலக லெவன் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. தென்ஆப்பிரிக்காவின் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான உலக லெவன் அணியில் இந்திய வீரர்கள் யாரும் இடம் பெறவில்லை. இந்திய வீரர்கள் யாரும் பங்கேற்காதது குறித்து பாகிஸ்தான் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது ஏக்கங்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக கேப்டன் விராட் கோலியையும், முன்னாள் கேப்டன் தோனியையும் தாங்கள் மிஸ் செய்தவதாக கூறியுள்ளனர்.

பாகிஸ்தானை சேர்ந்த ரசிகர் ஒருவர் தனது ட்விட்டரில், “லாகூரில் விராட் கோலியை மிஸ் செய்கிறோம். நீங்கள் ஏன் வரவில்லை?” என்று பதிவிட்டிருந்தார். மற்றொரு ரசிகர், “எங்களுடைய பாகிஸ்தான் நாடு விராட் கோலி, தோனியின் சிறப்பான ஆட்டத்தை லாகூரில் காண விரும்புகிறது. இது கிரிக்கெட். இங்கு வந்து உங்களது பேட்டிங்கால் எங்களை மகிழ்விக்குமாறு இதயபூர்வமாக கேட்டுக் கொள்கிறோம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதேபோல், பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ஆட்டக்காரருமான ஷகித் அப்ரிதி, இந்திய வீரர்கள் இருந்திருந்தால் சிறப்பானதாக இருந்திருக்கும் என்று தனது ட்விட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார். பாகிஸ்தான் ரசிகர்கள் வெளியிட்டுள்ள பதிவுகளில் கிரிக்கெட் வீரர்களை மட்டுமல்ல இந்திய நாட்டையும் அவர்கள் நேசிப்பதும், நட்பு நாடாக மனப்பூர்வமாக கருதுவதும் தெரிகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com