இந்திய வீரர்களுக்கு சொந்த மண்ணில் ட்ரீட் கொடுத்த தோனி

இந்திய வீரர்களுக்கு சொந்த மண்ணில் ட்ரீட் கொடுத்த தோனி

இந்திய வீரர்களுக்கு சொந்த மண்ணில் ட்ரீட் கொடுத்த தோனி
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கு ராஞ்சியில் தோனியும் அவரது மணைவியும் சேர்ந்த் விருந்தளித்துள்ளனர்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் போட்டித் தொடர் விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. டி20 தொடரை சொந்த மண்ணில் தோற்றதால், ஒருநாள் தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. இதில் முதல் போட்டியிலும் சரி, இரண்டாவது போட்டியிலும் சரி தோனியின் பங்கு குறிப்பிடத்தக்கது. முதல் போட்டியில் விக்கெட்டுகளை இந்தியா இழந்து தடுமாறியபோது, கேதர் ஜாதவிற்கு அறிவுரை வழங்கிக்கொண்டு இறுதி வரை களத்தில் நின்று வெற்றியை பறித்தார் தோனி. கடந்த போட்டியிலும் தோனி சரியாக பேட்டிங் செய்யாத போதிலும், இறுதி ஓவரை விஜய் சங்கர் வீசட்டும் என்று அவர் கூறிய அறிவுரை ஆட்டத்தை வெற்றிக்கு திருப்பியது. 

போட்டிக்கிடையே மைதனாத்திற்குள் ஓடி வந்த ஒரு ரசிகர், தோனியை விரட்டிப்பிடித்து வணங்கினார். மீண்டும் சிறந்த ஆட்டம் மற்றும் வெற்றிகள் ஆகிய இவற்றால் தோனி மகிழ்ச்சி மழையில் நனைந்துகொண்டிருக்கிறார். இந்நிலையில் தனது மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் தோனி மற்றும் அவரது மனைவி சாக்‌ஷி தோனி இந்திய அணிக்கு விருந்தளித்துள்ளனர். இதனை ராஞ்சியிலுள்ள தோனியின் இடத்தில் அளித்துள்ளனர். 

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் சாஹல், “நேற்று இரவு அளித்த விருந்திற்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார். 

இதேபோல இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது ட்விட்டர் பக்கத்தில் “நேற்று இரவு தோனியின் இடத்தில் நல்ல விருந்தாக அமைந்தது. அணியுடன் செலவழித்த மகிழ்ச்சியான இரவாக அமைந்தது” எனப் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com