’தல’ தோனி மகளுக்கு இன்று 3-வது பர்த் டே: குவிகிறது வாழ்த்துகள்!

’தல’ தோனி மகளுக்கு இன்று 3-வது பர்த் டே: குவிகிறது வாழ்த்துகள்!
’தல’ தோனி மகளுக்கு இன்று 3-வது பர்த் டே: குவிகிறது வாழ்த்துகள்!

கிரிக்கெட் வீரர் தோனி மகளுக்கு இன்று மூன்றாவது பிறந்த நாள். இதையடுத்து சமூக வலைத்தளங்களில் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் தனது நீண்ட நாள் தோழி சாக்‌ஷியை கடந்த 2010-ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு 2015-ம் ஆண்டு ஜிவா என்ற மகள் பிறந்தார். சமூக வலைத்தளங்களில் இவருக்கும் ரசிகர்கள் அதிகம்.

அப்பாவுடன் சப்பாத்தி மாவை உருட்டியது, மழலைக் குரலில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக் கூறியது, மலையாளப் பாடலை அதே ஸ்டைலில் பாடியது என சமூக வலைத்தளங்களில் ஜிவாவின் வீடியாவுக்கு ஏகப்பட்ட வரவேற்பு. அவருக்கு இன்று மூன்றாவது பிறந்தநாள். இதையடுத்து சமூக வலைத் தளங்களில் பாராட்டுகள் குவிந்துவருகிறது. 

தற்போது தென்னாப்பிரிக்காவில் உள்ள உள்ள தோனி, மகளுக்கு செல்ல முத்தங்களை பரிசாக அளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com