பயிற்சியின் போது தோனி காயம்: நாளை ஆடுவது சந்தேகம்!

பயிற்சியின் போது தோனி காயம்: நாளை ஆடுவது சந்தேகம்!

பயிற்சியின் போது தோனி காயம்: நாளை ஆடுவது சந்தேகம்!
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும் விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி, பயிற்சியின் போது காயம் அடைந்தார். இதனால் ஆஸ் திரேலிய அணியுடன் நாளை தொடங்கும் முதலாவது ஒரு நாள் போட்டியில் அவர் ஆடுவது சந்தேகம் என கூறப்படுகிறது.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி20 போட்டி, 5 ஒரு நாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிக ளுக்கு இடையிலான டி20 தொடரை ஆஸ்திரேலிய அணி கைப்பற்றிவிட்டது. இப்போது ஒரு நாள் போட்டித் தொடர் நடக்க இருக்கிறது.

முதலாவது ஒரு நாள் போட்டி ஐதராபாத்தில் நாளை நடக்கிறது. இதற்கான பயிற்சியில் இந்திய அணி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. விக்கெட் கீப்பர் தோனியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டிருந்தார். 

ராகவேந்திரா என்பவர் தோனிக்கு பந்துவீசிக்கொண்டிருந்தார். அவர் அடித்து ஆடியபோது எதிர்பாராதவிதமாக மிஸ் ஆன பந்து, தோனியின் வலது முழங்கையில் பலமாகத் தாக்கியது. வலியால் துடித்த அவர், பயிற்சியை முடித்துக்கொண்டு ஓய்வெடுக்கச் சென்றுவிட்டார். அதற்கு பிறகு அவர் பயிற்சியில் ஈடுபடவில்லை. இதனால் அவர் நாளைய போட்டியில் ஆடுவது சந்தேகம் எனக் கூறப்படுகிறது. 

தோனி விளையாடாதபட்சத்தில் ரிஷாப் பன்ட், விக்கெட் கீப்பிங் வேலையை கவனிப்பார் எனத் தெரிகிறது. இல்லையென்றால் கே.எல்.ராகுல் கவனிப்பார் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் காலையில்தான் முடிவெடுக்கப்படும் என்று இந்திய கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தெரிவித்து ள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com