தோனியை ஏன் எல்லோரும் நேசிக்கிறார்கள் தெரியுமா - இந்த வீடியோவை பாருங்கள் !

தோனியை ஏன் எல்லோரும் நேசிக்கிறார்கள் தெரியுமா - இந்த வீடியோவை பாருங்கள் !

தோனியை ஏன் எல்லோரும் நேசிக்கிறார்கள் தெரியுமா - இந்த வீடியோவை பாருங்கள் !
Published on

இந்திய விளையாட்டுத் துறையிலேயே பலருக்கும் பிடித்தமான வீரராக மகேந்திர சிங் தோனி திகழ்வதற்கு காரணம் விளையாட்டை தாண்டி அவரது பண்பும் தான். 

நீண்ட காலமாக கிரிக்கெட் உலகில் கோலோச்சி வந்த தோனி, தனது கிரிக்கெட் பயணத்தின் இறுதி பக்கங்களை எழுதிக் கொண்டிருக்கிறார். டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட அவருக்கு, டி20 போட்டிகளில் கூட அவரது மோசமான பாஃர்ம் காரணமாக வாய்ப்பு கிடைக்காத நிலை உள்ளது. மைதானங்களுக்கு உள்ளே தற்போதைய தருணத்தில், 50 ஓவர் ஒருநாள் போட்டிகளில் மட்டும் அவர் விளையாடி வருகிறார்.

இப்படியான ஒரு தருணத்தில், மோசமாக பாஃர்மை வெளிப்படுத்தி வந்தபோதிலும், தோனியின் மீதான அன்பு அவரது ரசிகர்களுக்கு இன்னும் குறைந்தபாடில்லை. அதற்கு காரணம் ஆட்டத்தின் போதும், அதற்கு வெளியேயும் அவர் நடந்து கொள்ளும் பண்பு தான். எத்தனையோ வெற்றிகளை குவித்த அவர், வெற்றியின் தருணங்களின் போது அவ்வளவு நிதானத்துடனும், பண்புடனுமே நடந்து கொண்டார். தோல்விகளின் போது எவ்வளவு நிதானம் தேவையோ, அதேபோல் வெற்றியின் போதும் இருக்க வேண்டும் என்று உணர்ந்தவர் தோனி. ‘கேப்டன் கூல்’ என்ற அந்த ஒரு வார்த்தை போதும். அதனால்தான், தோனியின் ரசிகர்கள் வட்டத்தையும் தாண்டி அவர் மீது அன்பு கொண்டவர்கள் அதிகம்.  

இந்நிலையில்தான், தோனியின் பக்குவத்துடன் நடந்து கொள்ளும் பண்பை வெளிப்படுத்தும் வகையில் தற்போது ட்விட்டரில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் சிறுவயது ரசிகர் ஒருவருடன் காரில் இருந்தபடி தோனி உரையாடிக் கொண்டிருக்கிறார். புரோட்டகால் பற்றி அவர் எதுவும் கவலைப்படவில்லை. விடைபெறும் முன்பு சிறுவனுடன் தோனி கை குலுக்கிவிட்டு செல்கிறார். 

37 வயதாகும் தோனி 10 ஆயிரம் ரன்களை எடுக்க, இன்னும் ஒரு ரன் மட்டுமே தேவைப்படுகிறது. அடுத்ததாக ஜனவரி மாதம் நடைபெறவுள்ள ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் தோனி விளையாடவுள்ளார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com