தோனிதான் இதிலும் டாப்: சச்சின், கோலியை பின்னுக்குத் தள்ளினார்!

தோனிதான் இதிலும் டாப்: சச்சின், கோலியை பின்னுக்குத் தள்ளினார்!
தோனிதான் இதிலும் டாப்: சச்சின், கோலியை பின்னுக்குத் தள்ளினார்!

மிகவும் பிரபலான விளையாட்டு வீரர் பட்டியலில் சச்சின், கோலியை பின்னுக்குத் தள்ளி தோனி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இங்கிலாந்தைச் சேர்ந்த yougov.co.uk என்ற இணையதளம் ஒவ்வொரு நாட்டின் சிறந்த, மக்களால் விரும்பப்படுகிற பிரபலமானவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

இதில் இந்திய விளையாட்டு பிரபலங்கள் பட்டியலில் தோனி முதலிடத்தில் இருக்கிறார். அவருக்கு 7.7 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளன.  இவரை அடுத்து, 6.8 சதவிகித வாக்குகளுடன் சச்சின் டெண்டுல்கரும் அடுத்து விராத் கோலியும் உள்ளனர். கோலிக்கான வாக்கு சதவிகிதம் 4.8.

தான் கேப்டனாக இருந்தபோது, 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையும் , உலகக் கோப்பையை 2011-லும் வென்றவர் தோனி. சமீபத்தில் இங்கிலாந்தின் லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு நாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்த 12 வது வீரர் என்ற மைல்கல்லை எட்டியிருந்தார் தோனி. 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com