தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 5வது ஒருநாள் கிரிக்கெட் தொடரில் சச்சினின் மைல்கல்லை ரோகித் சர்மா முறியடித்துள்ளார்.
இந்திய அணியைப் பொறுத்தவரை அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முன்னாள் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மகேந்திர சிங் தோனி உள்ளார். தோனி 331 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். தோனிக்கு அடுத்தபடியாக சச்சின் டெண்டுல்கர் 264 சிக்ஸர்களுடன் இரண்டாம் இடத்தில் இருந்தார்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இன்று 4 சிக்ஸர்களை ரோகித் சர்மா விளாசியுள்ளார். இதன் மூலம் 265 சிக்ஸர்களுடன் சச்சினை முந்தி ரோகித் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். தற்போது யுவராஜ் சிங் 249, கங்குலி 246 சிக்ஸர்களுடன் 4வது, 5வது இடங்களை பிடித்துள்ளனர்.
முன்னதாக, 2017ம் ஆண்டு ரோகித் சர்மா 64 சிக்ஸர்கள் அடித்து சாதனை புரிந்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.