\
கடைசி ஓவரில் ரன்களை வள்ளல் போல வாரி வழங்கிய வீரர்கள் : மோசமான ஐபிஎல் வரலாறு

கடைசி ஓவரில் ரன்களை வள்ளல் போல வாரி வழங்கிய வீரர்கள் : மோசமான ஐபிஎல் வரலாறு

கடைசி ஓவரில் ரன்களை வள்ளல் போல வாரி வழங்கிய வீரர்கள் : மோசமான ஐபிஎல் வரலாறு
Published on: 

பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே செப்டம்பர் 20ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மோசமான ஐபிஎல் வரலாற்று சாதனையை படைத்துள்ளார் பஞ்சாப் அணியின் பவுலர் ஜார்டன். சூப்பர் ஓவர் வரை சென்ற இந்த ஆட்டத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.

வள்ளல் போல கடைசி ஓவரில் 30 ரன்களை வாரி வழங்கியிருந்தார் அவர். 

ஜார்டன் வீசிய கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸர், மூன்று பவுண்டரி மற்றும் ஒரு ரன்னை எடுத்திருந்தார் டெல்லியின் ஸ்டாய்னிஸ். மேலும் மூன்று ரன்களை தன்பங்கிற்கு எடுத்திருந்தார் நார்ட்ஜெ. அதோடு ஒரு வைட் மற்றும் நோபாலையும் ஜார்டன் வீசியிருந்தார்.

இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே டிண்டாவுக்கு இணையாக கடைசி ஓவரில் அதிக ரன்களை (30 ரன்கள்) கொடுத்திருந்தார் ஜார்டன்.

இவர்களுக்கு அடுத்தபடியாக ஐபிஎல் போட்டிகளில் கடைசி ஓவர் வீசிய கொல்கத்தாவின் ஷிவம் மாவு (29 ரன்கள்), சென்னையின் பிராவோ (29 ரன்கள்) மற்றும் ராஜஸ்தானின் ஜெயதேவ் உண்ட்கட் (28 ரன்கள்) அதிக ரன்களை கொடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com