கிரிக்கெட் வீரர்களை விரட்டிய கொசுக்கள்: பயந்து ஓடிய வீரர்கள்!
எந்த பாகுபாடுமின்றி எங்கெங்கும் பரவியிருக்கிறது கொசுக்கள். பலத்த பாதுகாப்போடு இருக்கும் கிரிக்கெட் வீரர்களையும் இவை விட்டு வைக்கவில்லை.
பதினோறாவது ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா, இப்போது நடந்து வருகிறது. இதில் முதல் போட்டியில் சென்னை அணியி டம் தோற்ற மும்பை அணி, இரண்டாவது போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியை இன்று எதிர்கொள்கிறது.
ஐதராபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் நடக்கும் இந்தப் போட்டிக்காக, மும்பை வீரர்கள் அங்கு சென்றுள்ளனர். இவர்கள், நேற்று பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது டிரெஸ்சிங் போன வீரர்களுக்கு அதிர்ச்சி. கொசுக்கள் கூட்டமாக நின்று வீரர்களை வரவேற்றிருக்கிறது. இதை எதிர்பார்க்காத வீரர்கள், கொசுக்களை விரட்டியுள்ளனர். அப்படியெல்லாம் போய்விடுமா என்ன?
கொஞ்சம் நேரம் மறைந்து ஒளிந்த கொசுக்கள், வீரர்களை தேடி வந்து அட்டாக் பண்ணியிருக்கிறது. ஒரு கட்டத்துக்கு மேல், ‘யப்பா மிடியல’ என்று மைதான நிர்வாகிகளிடம் புகார் கூறினார். அவர்கள் வந்து டிரெஸ்சிங் ரூமில் வளைத்து வளைத்து கொசு மருந்து அடித்துள்ளனர். மயக்கம் வருமளவுக்கு அந்த மருந்தின் மணம் இருக்க, வீரர்கள் எஸ்கேப்.
இதுபற்றி மும்பை வீரர் ஒருவர் கூறும்போது, ‘கொசுக்கடி தாங்க முடியாததாக இருந்தது. உடனடியாக அதை கவனிக்காவிட் டால், மலேரியா வருவது நிச்சயம். ஆனால், நிர்வாகம் இதைக் கண்டுகொள்ளாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்கிறது’ என் றார்.
கடந்த திங்கட்கிழமை இங்கு விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினரும் இதுபற்றி புகார் அளித்தனர். ஆனால், மைதா ன நிர்வாகம் அதை கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.