மார்கனை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்த கொல்கத்தா !

மார்கனை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்த கொல்கத்தா !

மார்கனை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்த கொல்கத்தா !
Published on

இங்கிலாந்து வீரர் இயான் மார்கனை ரூ.5.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியின் 13 ஆவது சீசன் அடுத்த ஆண்டு தொடங்குகிறது. இந்நிலையில் அடுத்த ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் வீரர்களின் ஏலம் கொல்கத்தாவில் தொடங்கியுள்ளது.

இப்போது வரை, ராபின் உத்தப்பாவை ரூ.3 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல் அணி. அதனையடுத்து ஆஸ்திரேலிய வீரர் ஆரோன் பிஞ்சை ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது ராயல் சேலஞ்ஜர்ஸ் பெங்களூர் அணி. இங்கிலாந்து அணியின் இயான் மார்கனை தவிர்த்து தொடக்க ஆட்டக்காரர் ஜேசன் ராயை ரூ.1.50 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி. மேலும், அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு கிறிஸ் லின்னை ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

இந்திய வீரர்களான புஜாரா, ஹனுமா விஹாரி ஆகியோரை இதுவரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை. இவர்களின் அடிப்படை ஏல தொகை ரூ50 லட்சம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com