கேப்டனாக கோலியின் முதல் டி20 போட்டி: இங்கி. அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இந்திய அணியுடனான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கான்பூரில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 147 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, தோனி ஆட்டமிழக்காமல் 36 ரன்களும், சுரேஷ் ரெய்னா 34 ரன்களும் எடுத்தனர். கேப்டன் விராட் கோலி 29 ரன்கள் சேர்த்தார். மொயின் அலி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 148 ரன்கள் என்ற வெற்றி இலக்கை இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 19ஆவது ஓவரில் எட்டியது. தொடக்க வீரர்களான ஜேசன் ராய் 19 ரன்களும், சாம் பில்லிங்ஸ் 22 ரன்களும் எடுத்தனர். மூன்றாவது விக்கெட்டுக்கு இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் இயான் மோர்கன் 51 ரன்களும், ஜோ ரூட் ஆட்டமிழக்காமல் 46 ரன்களும் எடுத்தனர். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.