"தோனி இந்திய அணிக்கு திரும்புவது எளிதானல்ல" முகமது அசாருதின் கணிப்பு !

"தோனி இந்திய அணிக்கு திரும்புவது எளிதானல்ல" முகமது அசாருதின் கணிப்பு !
"தோனி இந்திய அணிக்கு திரும்புவது எளிதானல்ல" முகமது அசாருதின் கணிப்பு !

தோனி இந்திய அணிக்கு திரும்புவது அவ்வளவு எளிதானதாக தனக்கு தோன்றவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் முகமது அசாருதின் கருத்து தெரிவித்துள்ளார்.

2019 உலகக் கோப்பை அரையிறுதிக்கு பின்பு எம்.எஸ்.தோனி, இந்தியா சார்பில் சர்வதேசப் போட்டிகளில் கலந்துக்கொள்ளவில்லை. கொரோனா வைரஸ் காரணமாக ஐபிஎல் போட்டிகளும் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டதால் தோனியின் தரிசனம் ரசிகர்களுக்கு கிடைக்காமலேயே போய்விட்டது. மேலும் தோனி ஐபிஎல் தொடரில் விளையாடுவதை வைத்துதான் அவர் இந்திய அணிக்கு மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என பயிற்சியாளர் ரவி சாஸ்திரி கூறியிருந்தார்.

இந்நிலையில், ஐபிஎல் போட்டிகளும் நடைபெறாததால் தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கேள்விக்குறியாகியுள்ளது. மேலும் தோனியின் ஓய்வு அறிவிப்பு குறித்தும் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முகமுது அசாருதின் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள அவர் "தோனிக்கு என்ன தேவை என்பதை அவர்தான் கூற முடியும், அது அவருடைய தனிப்பட்ட விருப்பம். இப்போதைக்கு நாட்டின் சூழ்நிலை சரியில்லை. இப்போதைக்கு ஐபிஎல் போட்டிகளும் நடைபெறப்போவதில்லை. இதனால் இப்போதே தோனி குறித்த பிரச்னையை பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும். இதுவும் அவருடைய தனிப்பட்ட விருப்பம்தான்"

மேலும் தொடர்ந்த அசாருதின் "தோனி மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவது கடினம்தான். அப்படியே திருபம்புவதாக இருந்தாலும் தேர்வாளர்கள் அவருடைய திறனை பரிசோதிப்பார்கள். ஏனென்றால் அவர் கிரிக்கெட் விளையாடி பல மாதங்கள் ஆகிறது. நீங்கள் எவ்வளவு பெரிய வீரராக இருந்தாலும் கிரிக்கெட் தொடர்ந்து விளையாட வேண்டும். முதலில் ஒன்றை புரிந்துக்கொள்ள வேண்டும் கிரிக்கெட் பயிற்சி என்பது வேறு விளையாடுவது என்பது வேறு" என கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com