பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் முகமது அமிர் ’ஏ’ கிளாஸ் கிரிக்கெட் வீரராக பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
சூதாட்ட புகார் காரணமாக 5 வருட தடைக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு திரும்பியவர் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமிர். கடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றிக்கு உறுதியாக இருந்தார். இதையடுத்து அவர் உள்ளிட்ட சில கிரிக்கெட் வீர்ர்களுக்கு பதவி உயர்வு வழங்க, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்தது. அதன்படி பி பிரிவில் இருந்த முகமது அமிர், இப்போது ஏ பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளார்.
அதே போல் சி பிரிவில் இருந்த பாபர் ஆசம், ஹாசன் அலி, இமாத் வாசிம் ஆகியோர் சி பிரிவில் இருந்து ’பி’ பிரிவுக்கு உயர்த்தப்பட்டுள்ளனர்.

