லோதாக்குழு பரிந்துரைகளை செயல்படுத்துவதில்லை: கிரிக்கெட் சங்கம் மீது அசாருதீன் குற்றச்சாட்டு

லோதாக்குழு பரிந்துரைகளை செயல்படுத்துவதில்லை: கிரிக்கெட் சங்கம் மீது அசாருதீன் குற்றச்சாட்டு
லோதாக்குழு பரிந்துரைகளை செயல்படுத்துவதில்லை: கிரிக்கெட் சங்கம் மீது அசாருதீன் குற்றச்சாட்டு

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் மீது புகார் தெரிவித்துள்ளார்.

லோதாக்குழு பரிந்துரைகள் எதனையும் ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் செயல்படுத்துவதில்லை என முன்னாள் கேப்டன் முஹமது அசாருதீன் குற்றஞ்சாட்டியுள்ளார். முதல்தரக் கிரிக்கெட்டில் குறைந்த பட்சம் 25 போட்டிகளில் விளையாடியவர்கள் மட்டுமே தேர்வுக்குழுவில் இடம்பெற வேண்டும் என லோதாக்குழு பரிந்துரைந்துள்ளதை அசாருதீன் சுட்டிகாட்டியுள்ளார். 

ஹைதராபாத் கிரிக்கெட் சங்கம் அதனை பின்பற்றவில்லை என அவர் கூறியுள்ளார். இந்தகுற்றச்சாட்டுகளை ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவர் விவேகானந்த் மறுத்துள்ளார். அப்படி பிரச்னை இருந்தால் அசாருதீன் உச்சநீதிமன்றத்தை நாடட்டும் என அவர் பதிலளித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com