விளையாட்டு
ஏமாற்றிய ரோகித்; களத்தில் நிற்கும் கோலி, விஹாரி - இந்தியாவின் ஸ்கோர் நிலவரம் என்ன?
ஏமாற்றிய ரோகித்; களத்தில் நிற்கும் கோலி, விஹாரி - இந்தியாவின் ஸ்கோர் நிலவரம் என்ன?
இந்தியா மற்றும் இலங்கை கிரிக்கெட் அணிகள் மொகாலியில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மா, பேட்டிங் தேர்வு செய்தார். இந்நிலையில் இந்த போட்டியின் முதல் நாள் உணவு நேர இடைவேளை வரையிலான ஆட்டத்தில் இந்தியா 109 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய அணிக்காக கேப்டன் ரோகித் மற்றும் மயங்க் அகர்வால் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இருவரும் 50 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ரோகித் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். மயங்க் 33 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
இந்த போட்டி முன்னாள் கேப்டன் விராட் கோலிக்கு நூறாவது டெஸ்ட் போட்டியாகும். அவர் 22 பந்துகளை சந்தித்து 15 ரன்கள் எடுத்துள்ளார். மறுபக்கம் ஹனுமா விஹாரி 59 பந்துகளில் 30 ரன்கள் எடுத்துள்ளார்.