"சிஎஸ்கே ஜெர்சியில் இருந்து அதை நீக்க வேண்டும்" கோரிக்கை வைத்த மொயின் அலி!

"சிஎஸ்கே ஜெர்சியில் இருந்து அதை நீக்க வேண்டும்" கோரிக்கை வைத்த மொயின் அலி!

"சிஎஸ்கே ஜெர்சியில் இருந்து அதை நீக்க வேண்டும்" கோரிக்கை வைத்த மொயின் அலி!
Published on

தன்னுடைய சிஎஸ்கே ஜெர்சியில் இருக்கும் மதுபான நிறுவனத்தின் விளம்பர சின்னத்தை நீக்க வேண்டும் என ஆல் ரவுண்டர் மொயின் அலி விடுத்த கோரிக்கையை அணி நிர்வாகம் ஏற்றுக்கொண்டுள்ளது.

அடுத்த சில நாட்களில் ஐபிஎல் 2021 தொடர் ஆரம்பமாக உள்ளது. இந்த முறை எட்டு ஐபிஎல் அணிகளும் அவர்களது ஹோம் கிரவுண்டில் விளையாடாமல் மற்ற மைதானங்களில் விளையாடுகின்றனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய ஆட்டங்களை மும்பையில் விளையாடுகிறது. அதற்காக இப்போது சிஎஸ்கே வீரர்கள் அனைவரும் மும்பையில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இங்கிலாந்து ஆல் ரவுண்டரான மொயின் அலியை ரூ. 7 கோடிக்கு ஏலம் எடுத்தத. கடந்த ஐபிஎல் சீசன்களில் ஆர்சிபி அணிக்காக விளையாடியவர் மொயின் அலி. இந்நிலையில் சிஎஸ்கே ஜெர்சியில் மதுபான நிறுவனத்தின் விளம்பரச் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. இதற்கு மொயின் அலி ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

மொயின் அலி இஸ்லாமியர் என்பதால் மது தொடர்பான எந்த விளம்பரமும் தன்னுடைய ஜெர்சியில் இடம் பெற வேண்டாம் என்றும் அப்படி இடம்பெற்றுள்ள மதுபான விளம்பர சின்னத்தை நீக்கிவிடும்படியாக சிஎஸ்கே நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார். இதனை ஒப்புக்கொண்டு மொயின் அலியின் உணர்வுக்கு மதிப்பளித்து ஜெர்சியில் இருந்து நீக்கவும் முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com