பூர்விக மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் மொயீன் அலி

பூர்விக மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் மொயீன் அலி
பூர்விக மண்ணில் பாகிஸ்தானுக்கு எதிராக களமிறங்கும் மொயீன் அலி

பாகிஸ்தானுக்கு எதிராக நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு மொயீன் அலி தலைமை தாங்குகிறார்.

பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, ஏழு டி20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரானது நாளை (செப்.20) முதல் அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெறுகிறது. இங்கிலாந்து அணி 17 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு சென்றிருப்பதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

கராச்சியில் நாளை நடைபெறும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணிக்கு மொயீன் அலி தலைமை தாங்குகிறார். மொயீன் அலி பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார். இவரின் தாத்தா பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்திற்கு குடிபெயர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தனது தாத்தா பிறந்த மண்ணில் இங்கிலாந்து அணியை வழிநடத்துவது மொயீன் அலிக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த போட்டியாக அமைந்துள்ளது.  

இதுகுறித்து மொயீன் அலி பேட்டி ஒன்றில் கூறுகையில், ''இங்கிலாந்து அணி வீரராக பல வெளிநாட்டுப் பயணங்களைச் செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது, ஆனால் இந்த பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. பாகிஸ்தான் மக்கள் முன்னிலையில் விளையாடுவது மறக்கமுடியாதது. எனது கிரிக்கெட் பயணம் ஆசிய பாரம்பரியத்திலிருந்து வந்தது. ஜோஸ் பட்லர் காயத்தில் இருந்து மீண்டு வரும் வேளையில், இங்கிலாந்து அணியின் கேப்டனாக களமிறங்குவதை பெரிய கவுரவமாக பார்க்கிறேன்'' என்று கூறினார்.

இதையும் படிக்க: டி20 உலகக் கோப்பை தொடர்: இந்திய அணியின் புதிய ஜெர்ஸி அறிமுகம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com