இங்கிலாந்து அணியில் இருந்து மொயின் அலி நீக்கம்

இங்கிலாந்து அணியில் இருந்து மொயின் அலி நீக்கம்

இங்கிலாந்து அணியில் இருந்து மொயின் அலி நீக்கம்
Published on

இங்கிலாந்து டெஸ்ட் அணியில் இருந்து சுழல் பந்துவீச்சாளர் மொயின் அலி நீக்கப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேயா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி, வரும் 14 ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. இதற்கான இங்கிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. சமீப காலமாக சரியாக விளையாடாத சுழற்பந்து வீச்சாளர் மொயின் அலி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக இடக்கை சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் அழைக்கப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் இடம் பெறாத ஜோப்ரா ஆர்ச்சர் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இடம்பெற்றுள்ளார்.

அணி விவரம்:
ஜோ ரூட் (கேப்டன்), ஆர்ச்சர், ஜானி பேர்ஸ்டோவ், ஸ்டுவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாஸ் பட்லர், சாம் கர்ரன், ஜோ டென்லி, ஜாக் லீச், ஜேசன் ராய், பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ்.
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com