விளையாட்டு
5000, 10000 மீட்டர் ஓட்டத்தின் பதக்க நாயகன்: வெற்றியுடன் விடைபெற்ற மோ ஃபரா
5000, 10000 மீட்டர் ஓட்டத்தின் பதக்க நாயகன்: வெற்றியுடன் விடைபெற்ற மோ ஃபரா
பிரிட்டன் தடகள வீரர் மோ ஃபரா வெற்றியுடன், சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார்.
பிரிட்டன் தடகள வீரர் மோ ஃபரா, தனது கடைசிப் போட்டியாக, சுவிட்சர்லாந்தில் நடந்த ஐந்தாயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் பங்கேற்றார். இந்தப் போட்டியில் மோ ஃபரா, பந்தய தூரத்தை 13:06 நிமிடங்களில் கடந்து முதலிடம் பிடித்தார்.
34 வயதான மோ ஃபரா, ஒலிம்பிக்கில் 4 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில், 6 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை அவர் வென்றிருக்கிறார். மைதானத்திற்குள் நடக்கும் தடகள ஓட்டத்தில் இருந்து விடைபெற்றபோதிலும், சாலைகளில் நடைபெறும் மாரத்தான் போட்டிகளில் அடுத்த ஆண்டு முதல் பங்கேற்க மோ ஃபரா திட்டமிட்டுள்ளார்.