இறுதிப் போட்டி எளிதாக இருக்காது.. இங்கிலாந்தை எச்சரித்த மிதாலிராஜ்

இறுதிப் போட்டி எளிதாக இருக்காது.. இங்கிலாந்தை எச்சரித்த மிதாலிராஜ்

இறுதிப் போட்டி எளிதாக இருக்காது.. இங்கிலாந்தை எச்சரித்த மிதாலிராஜ்
Published on

உலகக் கோப்பை இறுதிப் போட்டி இங்கிலாந்துக்கு எளிதாக இருக்காது என்று இந்திய அணியின் கேப்டன் மிதாலிராஜ் எச்சரித்துள்ளார். 

இங்கிலாந்து அணிக்கெதிரான இறுதிப்போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மிதாலி ராஜ், உலகக் கோப்பை தொடர் போன்ற மிகப்பெரிய தொடரின் இறுதிப் போட்டியில் பங்கேற்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. அணியில் உள்ள ஒவ்வொருவரும் தங்களின் பொறுப்பை உணர்ந்து வெற்றிக்குத் தேவையான சரியான நேரத்தில் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார்கள். ஒரு அணியாக இறுதிப் போட்டியில் பங்கேற்பது சிறப்பானது. இறுதிப் போட்டி நிச்சயம் இங்கிலாந்து அணிக்கு எளிதாக இருக்காது. சொந்த மண்ணில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்வது கடினமாக இருப்பினும், இந்திய அணி கடும் போட்டியை அளிக்கும் என்றார். 
நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்ற இந்திய அணி, தொடரை நடத்தும் இங்கிலாந்து அணியை இறுதிப் போட்டியில் சந்திக்கிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்த போட்டி வரும் 23ல் நடைபெறுகிறது. மகளிர் உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்தை ஏற்கனவே வீழ்த்தியிருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com