\
“மிதாலி சிறந்தவர்! மிதாலி மோசமானவர்”-வார்த்தை போரில் இங்கி. வர்ணனையாளர் - இந்திய வீராங்கனை

“மிதாலி சிறந்தவர்! மிதாலி மோசமானவர்”-வார்த்தை போரில் இங்கி. வர்ணனையாளர் - இந்திய வீராங்கனை

“மிதாலி சிறந்தவர்! மிதாலி மோசமானவர்”-வார்த்தை போரில் இங்கி. வர்ணனையாளர் - இந்திய வீராங்கனை
Published on: 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்துள்ளது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீராங்கனை வனிதா மற்றும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த வர்ணனையாளரும், பத்திரிகையாளருமான இசபெல் வெஸ்ட்பரி (Isabelle Westbury) காரசாரமான வார்த்தை போரில் ஈடுபட்டுள்ளனர்.

“இந்திய கிரிக்கெட்டில் சிறந்த மற்றும் மோசமான விஷயம் என்றால் அது மிதாலி ராஜ்தான்” என ட்வீட் செய்துள்ளார் இசபெல் வெஸ்ட்பரி. 

“இந்திய அணியில் சிறந்தவை மட்டுமே உள்ளது. நீங்கள் இந்திய கிரிக்கெட் குறித்து கவலை கொள்வதை கைவிடுங்கள். இங்கிலாந்து அணி குறித்துதான் நீங்கள் கவலை கொள்ள வேண்டும். ஆஸ்திரேலிய அணியினரால் இங்கிலாந்து வீழ்த்தப்பட்டுள்ளது” என வனிதா தெரிவித்துள்ளார். 

ஆனால் வனிதாவின் வாதத்தை நிராகரித்துள்ளார் இசபெல் வெஸ்ட்பரி. மேலும் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு மிதாலி பொருத்தமற்றவர் என தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் இங்கிலாந்து அணி குறித்து தனக்குள்ள கவலை குறித்தும் அவர் அந்த ட்வீட்டில் பதிவு செய்துள்ளார். 

இந்த நிலையில் அதற்கு பதில் அளித்த வனிதா, “உங்களது கட்டுரையில் மிகவும் ஒழுக்கமாக யாருடைய பெயரையும் நீங்கள் பதிவு செய்யவில்லை. ஆனால் இங்கு தனி நபரின் பெயரை குறிப்பிட்டு சொல்லி அநாகரீகமாக நடந்து கொண்டு உள்ளீர்கள்” எண் சொல்லியுள்ளார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com