வெளியானது கேப்டன் மிதாலி ராஜின் பயோபிக் படத்தின் டீசர்!

வெளியானது கேப்டன் மிதாலி ராஜின் பயோபிக் படத்தின் டீசர்!
வெளியானது கேப்டன் மிதாலி ராஜின் பயோபிக் படத்தின் டீசர்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜின் பயோபிக் திரைப்படமான ‘ஷபாஸ் மித்து’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் மிதாலி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார் நடிகை டாப்சி. 

39 வயதான மிதாலி கடந்த 1999 முதல் இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் களத்தில் விளையாடி வருகிறார். தற்போது அவர் நடப்பு மகளிர் உலக கோப்பை தொடரில் இந்திய அணியை வழிநடத்தி வருகிறார். இந்நிலையில் 56 நொடிகள் ஓடும் ‘ஷபாஸ் மித்து’ டீசர் தற்போது வெளியாகி உள்ளது. 

 “இந்த ஜென்டில்மென் விளையாட்டில் தனது வெற்றிக் கதையை உருவாக்கியர்!” என சொல்லி டீசரை தனது சமூக வலைதள ஹேண்டிலில் வெளியிட்டுள்ளார் நடிகை டாப்சி. இந்த படத்திற்காக மிதாலி ராஜின் தோழியும், முன்னாள் இந்திய வீராங்கனையுமான நூஷின் அல் கதீரிடம் சிறப்பு பயிற்சி பெற்றிருந்தார் டாப்சி. 

கடந்த நவம்பரில் இந்த படத்தின் ஷூட்டிங் பணிகள் நிறைவடைந்தன. Viacom 18 ஸ்டூடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளது. இயக்குனர் ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com