யூசுப் பதானை தள்ளிவிட்ட மிட்செல் ஜான்சன் - லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் நிகழ்ந்த மோதல்

யூசுப் பதானை தள்ளிவிட்ட மிட்செல் ஜான்சன் - லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் நிகழ்ந்த மோதல்
யூசுப் பதானை தள்ளிவிட்ட மிட்செல் ஜான்சன் - லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட்டில் நிகழ்ந்த மோதல்

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் யூசுப் பதான் மற்றும் மிட்சல் ஜான்சன் இடையே சண்டை ஏற்பட்டது.

லெஜண்ட்ஸ் லீக் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஓய்வு பெற்ற சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் 4 அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர். இந்நிலையில், நேற்று இந்தியன் கேபிடல்ஸ் மற்றும் பில்வாரா கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான ப்ளே ஆஃப் சுற்று போட்டி நடைபெற்றது.

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய பில்வாரா கிங்ஸ் அணியில் யூசுப் பதான் அதிரடியாக விளையாடி வந்தார். அப்போது இவருக்கும் இந்தியன் கேபிடல்ஸ் அணியின் வீரர் மிட்சல் ஜான்சனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அந்தச் சமயத்தில் யூசுப் பதானை ஒரு கட்டத்தில் மிட்சல் ஜான்சன் தள்ளி விட்டுள்ளார்.

இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக ரசிகர்கள் பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இந்தப் போட்டியில்  யூசுப் பதான் 48 (24) ரன்கள் எடுத்தார்.

இதையும் படிக்க: 400-வது டி20 போட்டி: சாதனை பட்டியலில் இடம்பிடித்த ரோகித் சர்மா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com