விளையாட்டு
உலகச் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல்: தங்கம் வென்றார் இந்தியாவின் மீராபாய் சானு
உலகச் சாம்பியன்ஷிப் பளுதூக்குதல்: தங்கம் வென்றார் இந்தியாவின் மீராபாய் சானு
அமெரிக்காவில் நடந்த உலக சாம்பியன்ஷிப் பளுதூக்குதல் போட்டியில் இந்திய வீராங்கனை மீராபாய் சானு தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
அமெரிக்காவில் நடைபெற்ற உலக சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியின் 48 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்திய வீராங்கனை மீராபாய் சானு, ஸ்னாட்ச் முறையில் 85 கிலோவும், க்ளீன் அண்டு ஜெர்க் முறையில் 109 கிலோ எடையும் தூக்கி முதலிடம் பிடித்தார். இதன் மூலம் உலகச் சாம்பியன்ஷிப் பளுதூக்குதலில் கர்ணம் மல்லேஸ்வரிக்கு பிறகு தங்கம் வென்ற இந்தியர் என்ற சிறப்பை மீராபாய் சானு பெற்றுள்ளார். இதற்கு முன் கர்ணம் மல்லேஸ்வரி 1994, 1995 ஆகிய ஆண்டுகளில் தங்கம் வென்றிருந்தார்.