\
தமிழக வீரர் மாரியப்பனுக்கு அமைச்சர் அனுராக் தாகூர் நேரில் பாராட்டு

தமிழக வீரர் மாரியப்பனுக்கு அமைச்சர் அனுராக் தாகூர் நேரில் பாராட்டு

தமிழக வீரர் மாரியப்பனுக்கு அமைச்சர் அனுராக் தாகூர் நேரில் பாராட்டு
Published on

பாராலிம்பிக்கில் தொடர்ந்து இரண்டு முறை பதக்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் நேரில் வாழ்த்து தெரிவித்தார்.

ரியோ பாராலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றிருந்த மாரியப்பன், டோக்யோவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பதக்கம் வென்று நாடு திரும்பிய அவர், டெல்லியில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூரை சந்தித்தார். மாரியப்பன் தனது சாதனையால் தேசத்திற்கு பெருமை சேர்த்திருப்பதாக அமைச்சர் பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாரியப்பன், மத்திய, மாநில அரசுகள் அளித்த ஆதரவு, பதக்கம் வெல்ல உதவியதாகக் கூறினார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com