95 நிமிடம் நின்றும் டக்: வெஸ்ட் இண்டீஸ் வீரரின் இப்படியொரு சாதனை!

95 நிமிடம் நின்றும் டக்: வெஸ்ட் இண்டீஸ் வீரரின் இப்படியொரு சாதனை!
95 நிமிடம் நின்றும் டக்: வெஸ்ட் இண்டீஸ் வீரரின் இப்படியொரு சாதனை!

95 நிமிடம் களத்தில் நின்று ஒரு ரன் கூட எடுக்காமல் டக் அவுட் ஆகி, தேவையில்லாத சாதனை படைத்திருக்கிறார் வெஸ்ட் இண்டீஸ் வீரர் மிகுல் கம்மின்ஸ்.

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி, ஆன்டிகுவாவில் நடந்து வருகிறது. இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. 

பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் எடுத்திருந்தது. அதிகப்பட்சமாக சேஸ் 48 ரன்கள் எடுத்தார். கேப்டன் ஹோல்டர் 10 ரன்களுடனும் கம்மின்ஸ் ரன் கணக்கைத் தொடங்காமலும் களத்தில் இருந்தனர்.

3 ஆம் நாள் ஆட்டம் நேற்று நடந்தது. தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி, 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. ஹோல்டர் 39 ரன்கள் எடுத்தார். கம்மின்ஸ் 95 நிமிடம் களத்தில் நின்று 46 பந்துகளை சந்தித்தார். ஆனால், அவர் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. பின்னர் ஜடேஜா பந்தில் போல்டானார். 

களத்தில் அதிக நேரம் நின்று ஒரு ரன் கூட எடுக்காமல் கம்மின்ஸ் ஆட்டமிழந்தது சாதனையாகி இருக்கிறது. இதற்கு முன் 101 நிமிடங்கள் களத்தில் நின்று டக் அவுட் ஆகி முதலிடத்தில் இருக்கிறார் நியூசிலாந்து வீரர் ஜெஃப் அலாட். இவர் 1999 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்த ’சாதனை’யை செய்திருந்தார். அடுத்த இடத்தில் இப்போது கம்மின்ஸ் இணைந்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com