இன்னுமா ஸ்மித்திற்கு கேப்டன்சி பொறுப்பை மறுப்பது - மைக்கேல் வாகன் காட்டம்

இன்னுமா ஸ்மித்திற்கு கேப்டன்சி பொறுப்பை மறுப்பது - மைக்கேல் வாகன் காட்டம்

இன்னுமா ஸ்மித்திற்கு கேப்டன்சி பொறுப்பை மறுப்பது - மைக்கேல் வாகன் காட்டம்

கடந்த 2018 இல் நடைபெற்ற தென்னாப்பிரிக்க தொடர் வரை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இயங்கியவர் ஸ்டீவ் ஸ்மித். டெஸ்ட், ஒருநாள், டி20 என அனைத்திலும் ஸ்மித் தான் கேப்டன். ஆனால் அந்த தொடரின் மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேதப்படுத்திய குற்றத்திற்காக கேப்டன் ஸ்மித் மற்றும் வார்னருக்கு சர்வதேச கிரிக்கெட்டில் தடை விதிக்கப்பட்டது. 

அதன் பின்னர் தடை நீங்கி ஸ்மித் கிரிக்கெட் களத்திற்கு ரீ என்ட்ரி கொடுத்த போதும் கேப்டன்சி பதவி அவருக்கு கொடுக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில்தான், இந்தியாவுடனான டி20 தொடரின் இரண்டாவது போட்டியில் கேப்டன் ஃபின்ச் விளையாடாத பட்சத்தில் ஸ்மித்துக்கு மீண்டும் அணியை வழிநடத்தும் பணி கொடுக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் அது மறுக்கப்பட்டது. 

இந்நிலையில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால் ஸ்டீவ் ஸ்மித்தை கேப்டன்சி பதவியிலிருந்து தள்ளிவைப்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் மைக்கேல் வாகன்.

“ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளின் கேப்டன் ஃபின்ச் அல்லது டெஸ்ட் கேப்டன் டிம் பெய்னேவுக்கோ காயம் ஏற்பட்டால் அவர்களுக்கு மாற்றாக அணியை திறம்பட வழிநடத்தும் வீரர் யார் என்று பார்த்தால் எனக்கு தெரிந்து ஸ்மித் தான். அவர் ஆஸ்திரேலிய கேப்டனாக இருந்த போது தனது பேட்டிங்கில் எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் சிறப்பாக விளையாடியவர். ஒரு வேளை ஸ்மித் கூடுதல் பொறுப்புகளால் தடுமாறும் வீரர் என்றால் கூட அவர்களது வாதத்தை ஏற்கலாம். ஆனால் அவர் அப்படிப்பட்ட வீரராக இல்லாத பட்சத்தில் பந்தை சேதப்படுத்திய விவகாரத்தினால் கேப்டன்சி பதவியிலிருந்து அவரை தள்ளிவைப்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை” என தெரிவித்துள்ளார் மைக்கேல் வாகன். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com