சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹஸ்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
மைக்கேல் ஹஸ்சி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008-ம் ஆண்டில் இருந்து 2013 வரை 5 தொடர்களில் விளையாடினார். 2014-ம் ஆண்டு மட்டும் மும்பை இண்டியன்ஸ் அணிக்காக விளையாடினார். தோனி, ரெய்னாவுக்கு அடுத்தபடியாக சென்னை அணிக்காக அதிக ரன்கள் குவித்தவர் ஹஸ்சி. அவர் 1768 ரன்கள் எடுத்து இருந்தார்.
இரண்டு ஆண்டு தடைக்குப் பிறகு சென்னை அணி மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் களமிறங்கியுள்ளது. 11வது ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வருகின்ற ஜனவரி 27, 28 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதனிடையே சென்னை அணிக்காக தோனி, ரெய்னா, ஜடேஜா மூவரையும் தக்க வைக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், சென்னை சூப்பர் கிங் அணியில் பேட்டிங் பயிற்சியாளராக மைக்கேல் ஹஸ்சி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து ஹஸ்சி கூறுகையில், மீண்டும் சென்னை அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.