வார்னருக்கு பதில் குப்தில் - டாஸ் வென்ற மும்பை பேட்டிங்

வார்னருக்கு பதில் குப்தில் - டாஸ் வென்ற மும்பை பேட்டிங்

வார்னருக்கு பதில் குப்தில் - டாஸ் வென்ற மும்பை பேட்டிங்
Published on

ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை இண்டியன்ஸ் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

மும்பை இண்டியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பெற இரு அணிகளும் முயற்சிக்கும் என்பதால், போட்டியில் பரபரப்பு இருக்கும். டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது. 

ஹைதராபாத் அணியில் டேவிட் வார்னருக்கு பதில் குப்தில் களமிறங்குகிறார். அதேபோல், சந்தீப்புக்கு பதில் பசில் தம்பி விளையாடுகிறார். மும்பை அணியில் எவ்வித மாற்றமும் இல்லை. புள்ளிப் பட்டியலை பொருத்தவரை 7 போட்டிகளில் வெற்றி பெற்று மும்பை 3வது இடத்தில் உள்ளது. 

அதேபோல், 6 போட்டிகளில் வென்று ஹைதராபாத் 4வது இடத்தில் உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால், மும்பை அணி தன்னுடைய பிளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யும். அதேபோல், ஹைதராபாத் அணி வெற்றி பெற்றால், பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாகும். ரன் ரேட் அடிப்படையில் பிளே ஆஃப் வாய்ப்பு உறுதியாகவும் வாய்ப்புள்ளது.

இரு அணிகளும் 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில், மும்பை இண்டியன்ஸ் 6 போட்டிகளிலும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 7 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com